என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருவாய்த்துறை அதிகாரிகள்"
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி ஊராட்சி மன்றத்திற்கு ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் அங்குள்ள சிவன் கோவில் அருகே கட்டப்பட உள்ளது. இதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று தொழிலாளர்கள் பலர் இப்பணியில் ஈடுபட்டனர். குழிகள் பாதி தோண்டியபோது மண்ணுக்குள் 2 ½ அடி உயரமுள்ள அம்மன் சிலை, அடித்தள பீடம், பலி பீடம் ஆகியவை புதைந்து கிடந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரகாசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அம்மன் சிலை மற்றும் பீடங்களை மீட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்றும் அதே இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது நேற்று அம்மன் சிலை எடுக்கப்பட்ட இடத்தின் கீழே தோண்டப்பட்டபோது, மீண்டும் சுமார் 2½ அடி உயரமுள்ள அம்மன் சிலை, ½ அடி உயரத்தில் பைரவர் சிலை மற்றும் முகம் சேதமடைந்த நிலையில் நாயன்மார்கள் சிலை கிடந்தது.
அந்த சிலைகள் சிதைந்து விடாத வகையில் பாதுகாப்பாக தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் சிலைகளை மீட்டு சென்றனர்.
தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் 150 முதல் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனவும், உலோகத்தால் செய்யப்பட்ட அவை ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அவற்றினை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் தான் அவை எந்த காலத்தில், எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது என்பது தெரியவரும்.
அறந்தாங்கி அருகே சிலைகள் தோண்டியெடுக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவவே, பொதுமக்கள் அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அம்மன் சிலைகள், பைரவர் சிலை, நாயன்மார்கள் சிலை, பலி பீடம், அடி பீடம் ஆகியவை மீட்கப்பட்ட பகுதியில் இன்னும் பல்வேறு சிலைகள் புதைந்து கிடக்கலாம். ஏனென்றால் அப்பகுதியில் பழமைவாய்ந்த சிவன்கோவில் இருந்துள்ளது. மேலும் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்கான தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களும் புதைந்து கிடக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே தொல்லியல் துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் அப்பகுதி முழுவதும் அகழ் ஆராய்ச்சி மேற்கொண்டு மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் புதையல்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான மணல் தடுப்பு சிறப்பு குழுவினர் இன்று அதிகாலை ராஜபாளையம்-தென்காசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 10 லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு வரிசையாக வந்தன. அந்த லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சவுடு மண்ணுக்கு அனுமதி பெற்று இருப்பதாக கூறி ஆவணங்களை காட்டினர்.
மேலும் ஆன்லைன் ரசீதையும் லாரியில் வந்தவர்கள் கொடுத்தனர். ஆன்லைன் ரசீதை வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே ஆய்வு செய்த போது அந்த ரசீதுகளில் முறைகேடு செய்து இருப்பது தெரியவந்தது.
கடந்த மாதத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு தொடர்ந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிந்தது.
இந்த மணல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ராஜபாளையம் வழியாக நெல்லை மாவட்டம் கடையத்துக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 10 மணல் லாரிகளையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த லாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்